இயக்குனர்களுக்கு குறும்படங்கள் தான் சான்று- ஆர்யா

ராடான் நிறுவனம் நடத்திய குறும்பட திருவிழாவில் இறுதி சுற்றுக்கு தகுதியான படங்களுக்கு விருது வழங்கும் விழா நடந்தது. உலக அளவிலான போட்டியில் அகதிகளாக செல்லும் குழந்தைகள் பற்றிய படமான ‘ஓடம்’ முதல் இடத்தையும், ‘நிழல்’ என்ற திகில் படம் இரண்டாம் இடத்தையும் பிடித்தது. இதனை அஞ்சலி இயக்கி இருந்தார். அவருக்கு விருதை ஆர்யா வழங்கினார்.

arya

பின்னர் விழாவில் ஆர்யா பேசியதாவது…

”குறும்படம் எடுப்பது வாய்ப்பு தேடும் உதவி இயக்குனர்களுக்கு அவசியமான ஒன்று… அதைவிட்டு விட்டு மூணு மணி நேரம் கொடுங்க முழுக்கதையும் சொல்கிறேன் என்று கேட்பது எரிச்சலை உண்டாக்கும்…. பத்தாயிரம் சம்பள வேலைக்கே பதினைஞ்சு சர்டிபிகேட் தேவைப்படுறது. அப்படி இருக்கும் போது கோடிக்கணக்கில் செலவு செய்து படத்தை இயக்க குறும்படம் தான் சர்டிபிகேட்…” என்றார்.

இந்திய அளவில் இறுதிச்சுற்றுக்கு, ஒரு தெலுங்கு படத்துடன் ஐந்து தமிழ்ப்படங்கள் தேர்வாகியிருந்தன. ஜிகே இயக்கிய அசரீரி முதல் இடமும், விவேக் – மனோ இயக்கிய தடை மற்றும் அஞ்சலி இயக்கிய இறுதிவரை ஆகியவை முறையே இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பிடித்தன. இறுதிச்சுற்று நடைபெறும் முன்னரே தெலுங்கில் குறும்படம் இயக்கியவருக்கு படம் இயக்க வாய்ப்புக் கிடைத்து விட்டது குறிப்பிடத்தக்கது.

விழாவில் ராதிகா சரத்குமார், இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், இயக்க்குனர் பாலாஜி மோகன், கே.பாக்யராஜ், நடிகை லிஸி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Posts