இயக்குனரின் கடுமையான உழைப்பில் காஷ்மோரா உருவானது: கார்த்தி

கார்த்தி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘காஷ்மோரா’. கோகுல் இயக்கியுள்ளார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். டிரீம் வாரியர் பிக்சர்ஸ் எஸ்.ஆர்.பிரகாஷ், எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ளனர்.

kashmora-karthi

இதன் இசை மற்றும் டிரைலர் நேற்று வெயியிடப்பட்டது. தீபாவளிக்கு திரைக்கு வர இருக்கும் இந்த படம் பற்றி கார்த்தி கூறும்போது… “இந்த படத்தில் வரும் காஷ்மோரா கதாபாத்திரம் இயக்குநர் கோகுலின் கடுமையான உழைப்பால் உருவானது. இந்த கதாபாத்திரத்தை உருவாக்க அவர் அதிக காலம் எடுத்துக்கொண்டு மிகவும் ஆழமாக ஆராய்ந்து படைத்துள்ளார். இது மிகவும் புதுமையானது.

தமிழ் சினிமாவில் இதுவரை யாரும் கையிலெடுக்காத ஒரு கதாபாத்திரம். தமிழ் சினிமாவில் யாரும் ஆழமாக சொல்லாத, தொடாதபில்லி, சூனியம், ஏவல் போன்றவற்றை செய்யும் பிளாக் மேஜிசியன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். இது ராஜ் நாயக் பாத்திரத்தில் இருந்து முற்றிலும் வேறுபடும். நிச்சயம் இதை ரசிகர்கள் மிகபெரிய அளவில் ரசிப்பார்கள்” என்றார்.

Related Posts