இம்மாதம் 22,23, 24 ஆம் திகதிகளில் கடும் மழை

இம்மாதம் 22, 23, 24 ஆம் திகதிகளில் கடும் மழையுடன் கூடிய காலநிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளதாகவும், இதனால், ஏற்படும் வெள்ளம் மற்றும் மண் சரிவு என்பவற்றிலிருந்து பாதுகாப்புப் பெற, முன் ஏற்பாடுகளை செய்து கொள்ள வேண்டும் எனவும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாபா தெரிவித்துள்ளார்.

இந்த தயார்படுத்தல், தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்திக் கொள்வதற்காக அல்லவெனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

படகுச் சேவையைத் தயார் நிலையில் வைத்திருக்கும் பொறுப்பை பொலிஸாருக்கு ஒப்படைத்துள்ளதாவும், பிரதேச செயலகங்கள் இந்தப் பணியை சரியாக செய்யத் தவறியுள்ளதாகவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

Related Posts