இன மத வேறுபாடின்றி நடைபெற்ற கோமாதா பவனி

யாழ் நகர் சத்திரம் ஞான வைரவர் ஆலயதில் நேற்று நடைபெற்ற பட்டி பொங்கல் விழாவில் பசுக்களுக்கான விசேட பூஜை வழிபாடும் பசு ஊர்வலமும் இடம்பெற்றது.

paddip-pongal-jaffna

பண்டிதர் வ.பேரின்பநாயகம் தலைமையில் நடைபெற்ற இவ் விழாவில் முதன்மை விருந்தினராக வட மாகாணசபை விவசாய கால்நடை அமைச்சர் பொ.ஜங்கரநேசன் சிறப்பு விருந்தினராக வட மாகணசபை உறுப்பினர் பா.கஜதீபன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

பசு வதை மகா கொடிய பாவமாகும். பசுவை கொன்றால் சிலருக்கு ஒரு நாள் உணவு பசுவை வளர்த்தால் பலருக்கு பல நாள் பால் என்ற தொனிப்பொருளில் சமய தொண்டு நிருவனங்களால் துண்டு பிரசுரங்களும் நகர் பகுதி எங்கும் விநியோகிக்கப்பட்டது.

இவ் விழாவில் இன மத வேறுபாடின்றி அனைவரும் கலந்து கொண்டனர். மேலும் இவ் விழாவிற்கு சமய பெரியார்கள் பாடசாலை மாணவர்கள் ஆலய தொண்டர்கள் வர்த்தகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Related Posts