வடமாகாண சபையில் ‘இன ஒழிப்பு’ என்ற சொற்பதத்தை பயன்படுத்த வேண்டாம் என்று வடமாகாண முதமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் தெரிவித்தார்.
வடமாகாண சபையின் நேற்றைய அமர்வின் போது அனந்தி சசிதரன் மற்றும் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோர் இனவொழிப்பு சொற்பதங்களைப் பயன்படுத்தினர். இதனையடுத்தே முதமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
முதமைச்சர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், இனவழிப்பு என்பது ஒரு சட்டச் சிக்கலான வார்த்தைப் பிரயோகம். சர்வதேச விசாரணைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே இனவழிப்பு என்ற வார்த்தை பயன்படுத்த முடியும். அது வரையிலும் இனவழிப்புக்கு ஒப்பானது என்ற வார்த்தை பயன்படுத்தவும் என்று எடுத்துரைத்தார்.
வடமாகாண சபையின் நேற்றைய அமர்வில் 6 உறுப்பினர்கள் மற்றும் முதமைச்சரினால் 12 பிரேரணைகள் சபையின் முன்வைக்கப்பட்டு, சிலவற்றில் மாற்றங்கள் செய்யப்பட்டதுடன் அனைத்து பிரேரணைகளும் ஏகமனதாக சபை உறுப்பினர்களினால் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
வடமாகாண சபையின் 5 ஆவது அமர்வு நேற்று கைதடியிலுள்ள வடமாகாண சபை கட்டிடத் தொகுதியில் தவிசாளர் சீ.வி.கே.சிவஞானம் தiஷமையில் நடைபெற்றது.
இதன்போது சபை உறுப்பினாஷகளினால் 12 பிரேரணைகள் முன்வைக்கப்பட்டன.
- முள்ளிவாய்க்காலில் உயிர்நீர்த்த பல்லாயிரக்கணக்கான உயிர்களின் நினைவாக நினைவுத்தூபியொன்றை அமைக்கவேண்டும்.
- புதுக்குடியிருப்புப் பிரதேச வைத்தியசாலையினை நோயாளர்களின் எண்ணிக்கையினைக் கவனத்தில் கொண்டு அதனை ஆதார வைத்தியசானையாக மாற்றுதல்.
- முல்லைத்தீவில் காணியற்றவர்களுக்கு காணிக்காக விண்ணப்பித்தவர்களுக்கு காணி கச்சேரி நடத்தி காணியை வழங்கக்கோரல்.
- தமிழ்த் தேசத்தின் இது நடத்தப்பட்டதும், நடந்து கொண்டிருப்பதும் இலங்கை அரசினால் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படுகின்ற திட்டமிட்ட இன அழிப்பு என்பதனை அனைத்துலக சமூகத்திற்கு நாம் சுட்டிக் காட்டவேண்டும்.
- இருந்தும் இந்தப் பிரேரணையிலிருந்த திட்டமிட்ட இன அழிப்பு என்ற வார்த்தையினை இனவழிப்புக்கு ஒப்பானது என்றும், தமிழ் மக்கள் என்பதனை எமது மக்கள் என்றும் விவாதங்களின் பின்னர் மாற்றம் செய்யப்பட்டு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
- இஷங்கை அரசில் எமக்கு நம்பிக்கையும் இல்லை என்பதுடன் எந்தவிதமான உள்நாட்டு பொறிணிறைகளும் எமக்கு நீதியையோ அல்லது அரசியல் தீர்வையோ ஒரு போதும் கொடுக்குமென நம்பவே இல்லை. ஆகையால் அனைத்து உள்நாட்டுப் பொறிணிறைகளையும் அடியோடு நிராகரித்தல்.
- எமது மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் மானிடத்திற்கு எதிரான குற்றங்கள் இனப்படுகொலைகளுக்கு ஒப்பானவற்றின் விசாரணைகளை செய்வதற்காக பக்கச்சார்பற்ற பன்னாட்டு விசாரணையை ஐக்கிய நாடுகள் சபையின் துணையுடன் உருவாக்குவதற்கு அனைத்துலக சமூகத்தினையும் வேண்டுதல்.
- மன்னார், திருக்கேதீஸ்வர மனிதப் புதைகுழி விடயத்தில் மேற்கொள்ளப்பட்ட உள்ளக விசாரணைகளும் இரசாயன பகுப்பாய்வும் ஜ.நா.வின் மேற்பார்வைக்குழுவின் உதவியுடன் மேற்கொள்ளப்பட வேண்டும்.
- வடமாகாணத்தின் அரச திணைக்களங்களின் பெயர்ப்பலகைகள் அனைத்திலும் தமிழ் மொழி முதலாவதாகவும், இரண்டாவதாக சிங்கள மொழியும் மூன்றாவதாக ஆங்கில மொழியும் இடம்பெறவேண்டும்.
- முல்லைத்தீவு மாவட்டத்தின் முத்தையன் கட்டுக்குளத்திற்கு மேற்காக படையினரின் பயிற்சித் தளத்திற்கு அருகில் தமிழ் மக்களின் 2000 இற்கும் மேற்பட்ட மாடுகளை கொண்ட பண்ணையினை இராணுவத்தினர் நடத்தி வருகின்றனர். இதனை வடமாகாண சபை பொறுப்பேற்று குறியிடப்பட்ட மாடுகளை உரியவர்களிடம் ஒப்படைப்பதுடன், மிகுதி மாடுகளை பண்ணை அமைத்து பராமரித்து வருமான ஈட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
- வடமாகாணத்தில் கட்டாக்காலிகளாகத் திரியும் மாடுகள் களவாகப் பிடிக்கப்பட்டு இறைச்சியாக்கப்படுவதுடன், வீதிகளில் விபத்துக்களுக்கும் காரணமாக அமைகின்றன. எனவே அவற்றினை வடமாகாண சபை பிடித்து, உரிமை கோருபவர்களிடம் கொடுக்கவேண்டும். அத்துடன் மிகுதியினை பண்ணை அமைத்து வளர்க்க வேண்டும் – இருந்தும் இந்தப் பிரேரணையில் கட்டாக்காலிகள் மாடுகளினால் பெருமளவிற்கு பால் பெறணிடியாத நிலை காணப்படுவதினாலேயே அவை இவ்வாறு விடப்பட்டுள்ளதாகவும், எனவே அவை தொடர்பாக திட்டம் ஒன்று வகுத்து அதற்கு ஏற்றாற்போல் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என வடமாகாண விவசாய அமைச்சர் பதிலளித்தார். இந்த இணக்கத்திற்கு அமைவாக அந்தப் பிரேரணையும் நிறைவேற்றப்பட்டது.
- வவுனியா பூந்தோட்டத்தில் கூட்டுறவுப் பயிற்சிக் கல்லூரி, மன்னார் கூட்டுறவுச் சபை அலுவலகம் ஆகியவற்றிலிருந்து படைத்தரப்பினர் வெளியேறி அவற்றினை கையளிக்கவேண்டும்.
- பிரித்தானியப் பிரதமர் யாழ்ப்பாணம் வருகை தந்து யாழ்ப்பாணத்தின் நிலைமைகளைப் பார்வையிட்டமை தொடர்பாக நன்றி தெரிவிக்கும் முகமான பிரேரணையினை முதலமைச்சர் சபையின் முன்வைக்க அது ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட் கட்சிகள் கொலைகள் செய்தன.
ஏ.டி.தர்மபாலா தனது உரையின் போது, ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட், ரெலோ போன்ற கட்சிகள் கொலைகளினைச் செய்து விட்டு அரசாங்கம் இது பழிகளைப் போடுகின்றது எனக்கூறிய விடயம் சபையில் பெரும் அமளி துமளியினை ஏற்படுத்தியது.
அந்தக் கருத்தினை வன்மையாகக் கண்டித்த எம்.கே.சிவாஜிலிங்கம், விந்தன் கனகரத்தினம், மற்றும் கந்தையா சர்வேஸ்வரன் ஆகியோர் இது தவறான வார்த்தைப் பிரயோகம், இதனை ஏ.டி.தர்மபாலா வாபஸ் பெறவேண்டும் என வலியுறுத்தினார்கள்.