தற்போதைய அரசாங்கத்தின் கீழ், நாட்டினுள் நிர்மாணிக்கப்பட்டுள்ள இன ஒற்றுமையை பாதிக்கும் வகையில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் ஏற்பாடு செய்துள்ள பாத யாத்திரையை தோற்றடிக்க செய்ய வேண்டும் என, இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து நல்லாட்சி அரசாங்கம் செயற்படுகின்ற வேளையில், அதற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி நடவடிக்கை எடுத்து வருவதாக, மாவை சேனாதிராஜா சுட்டிக்காட்டியுள்ளார்.
வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.
தற்போதைய அரசாங்கத்தால் கட்டியெழுப்பப்பட்டுள்ள நல்லிணக்கத்தை சீர் குலைக்க எவரையும் அனுமதிக்கப் போவதில்லை என மாவை சேனாதிராஜா இங்கு மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் அதிகாரத்தைக் கைப்பற்ற இவ்வாறான பாத யாத்திரையை மேற்கொண்டு வருவதாக, அவர் கூறியுள்ளார்.