இன்றைய வடக்குமாகாணசபை சிறப்பு அமர்வில்

வடக்கு அமைச்சர்களின் விசாரணை அறிக்கை மீதான சிறப்பு  96 வது அமர்வு இன்று காலை  ஆரம்பமாகியது. இந்த அமர்வில் எந்த விவாதமும் இல்லை என அவைத் தலைவர் அறிவித்தார்

அதன்பின் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட அமைச்சர்கள் தன்னிலை விளக்கம் அளிக்க ஆரம்பித்தனர். அமைச்சரவையே குற்றச்சாட்டுக்கான பதில் வழங்க வேண்டும். கல்வி அமைச்சர் குருகுலராசா தெரிவித்தார்

அதன்பின் தன்னிலை விளக்கம் வழங்கும்போது எதுவித இடையூறும் இல்லாமல் வழங்க இடமளிக்க வேண்டும் என கூறி விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தன்னிலை விளக்கம் வழங்கினார். அவருடைய அறிக்கை 19 பக்கங்கள் கொண்டதாக இருந்தது

பின்வரும் விடயங்களை அவர் முக்கியமாக சுட்டிக்காட்டினார்

  • நீதிக்கு புறம்பாக விசாரணைக் குழு பரிந்துரை வழங்கியுள்ளது.
  • முதலமைச்சர், விவசாய அமைச்சிலிருந்து வெளியேறுமாறு கேட்டால் வெளியேறுவேன்.
  • விசாரணைக் குழு உறுப்பினர்கள் பற்றி இங்கு பேச அனுமதிக்க வேண்டாம் – எதிர்கட்சித் தலைவர் சி.தவராசா.
  • விசாரணைக் குழுவின் உறுப்பினர்களின் பெயர்கள் சொல்லி பேசுவதை தவிருங்கள். – அவைத் தலைவர்.
  • விசாரணைக் குழுவின் நம்பகத் தன்மையிலும், நடுநிலையிலும் சந்தேகம் உள்ளது.
  • உண்மைக்குப் புறம்பானது.தனது அமைச்சு செயலாளர் தொடர்பில், விசாரணைக் குழு கூறியது தொடர்பாக ஐங்கரநேசன் தெரிவிப்ப
  • எவரையும் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்குடன்,சுன்னாகம் குடிதண்ணீர் விவகார ஆய்வு குழு செயற்படவில்லை.
  • உள்நோக்குடன் அரசியல்வாதிகள் கூறுவதைப்போன்று, விசாரணைக்குழுவும் செயற்பட்டுள்ளது.
  • டெங்கு ஒழிப்பு, மலேரியா ஒழிப்புக்கு செலவு செய்யும் நிதி சரியானால், பார்த்தீனிய ஒழிப்பு விவசாய அமைச்சு செலவு செ
  • பார்த்தீனிய ஒழிப்பு நடவடிக்கை கொழும்பு அரசினாலேயே தடைப்பட்டது.
  • நடைமுறைகளை சரிவர விசாரணைக் குழு புரிந்து கொள்ளத் தவறியமையே, குற்றச்சாட்டுக்களுக்கு காரணம்.
  • கிணறு திருத்தங்களில் எதுவித மோசடியும் இடம்பெறவில்லை.
  • எமது அமைச்சால் ஏற்பாடு செய்யப்பட்ட எந்தவொரு நிகழ்வும், களியாட்டமாக இருந்ததில்லை.
  • கவிஞர் வைரமுத்து அவரது சொந்த செலவிலேயே இங்கு வந்து சென்றார்.
  • கவிஞர் வைரமுத்துவின் பன்முகத் தன்மையை விசாரணைக் குழு தெரிந்து வைத்திருக்கவில்லை.
  • வவுனியாவில் மூங்கில் செய்கையில், அனுமதி மறுத்தது நான் அல்ல. வவுனியா மாவட்டச் செயலகம்தான்.
  • ஏனைய குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும் நான் கருத்து முன்வைக்க விரும்புகின்றேன்.
  • என்மீது சுமத்தப்பட்ட 10 குற்றச்சாட்டுக்கள் தொடர்பில், மூன்று விடயங்களை மாத்திரமே இங்கு சுட்டிக்காட்டியுள்ளேன
  • கொள்கைப் பெறுமானங்களை விசரணைக்குழு கேள்விக்கு உட்படுத்தியுள்ளது.
  • விசாரணைக் குழு தனது செயற்பாட்டு எல்லைக்கு அப்பால் சென்று, சில விடயங்களைக் கூறியுள்ளது.
  • விசாரணைக் குழு, கொழும்பு அரசுக்கு அதிகாரங்களை மையப்படுத்தும் விதத்தில் கருத்துக் கூறியுள்ளது.
  • விசாரணைக் குழு ஏதோவொரு நிகழ்சி நிரலில் செயற்பட்டுள்ளது.
  • மிகவும் அடிப்படையானகுற்றவியல் நடைமுறையை மீறும் வகையில் விசாரணைக் குழு அறிக்கை உள்ளது.
  • என்மீதான குற்றச்சாட்டுக்களில் விசாரணைகள் குழுவின் உய்தறிவுகளுக்கு முரணாக, அவர்களின் விதந்துரை உள்ளது.
  • விசாரணைக் குழுவில் உள்ள சிலர், என்னை மாட்டி விடும் உள்நோக்குடன் செயற்பட்டுள்ளனர்.
  • என்னைப் பற்றி தவறான விம்பத்தை ஏற்படுத்தும் நோக்குடன் அறிக்கை உள்ளது.
  • கையூட்டு, நிதிமோசடி, ஊழல் புரிந்ததாகவோ, விசாரணை அறிக்கையில் சொல்லவில்லை.
  • என் மீது பொய்யான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வந்துள்ளன.

அதன்பின் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தன்னிலை விளக்கத்தை முடித்துக் கொண்டார்.

தேநீர் இடைவேளைக்காக சபை ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர் ஆரம்பித்த வேளை முதலமைச்சர் தனது நிலைப்பாட்டை அறிவித்த பின்னர் சபையை ஒத்தி வைக்கலாம்  என உறுப்பினர் சிவாஜிலிங்கம் கேட்டுக்கொணடார்

எதிர்கட்சித் தலைவரை பேச அனுமதித்தால், ஏனைய உறுப்பினர்களும் பேசுவார்கள் எனவே எதிர்கட்சித் தலைவரை பேசஅனுமதிக்க முடியாது.  என உறுப்பினர் அஸ்மின் தெரிவித்தார்

அமைச்சர்கள் மீது நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்பட்டு நடத்தப்படும்விவாதம் அல்ல என உறுப்பினர் கே.சயந்தன் குறிப்பிட்டார்

விவாதம் வேண்டாம் என்றால், சபையில் தன்னிலை விளக்கத்துக்கு அனுமதித்திருக்கக் கூடாது.  எங்களுக்கு பேச வாய்ப்பளிக்காவிடில் எதிர்கட்சிகள் நாங்கள் வெளியேறுகின்றோம் என எதிர்கட்சித் தலைவர் சி.தவராசா குறிப்பிட்டார்

ஒருதலைபட்டசமாகச் செயற்படுகின்றீர்கள் எனவும்  அவைத் தலைவர் மீது எதிர்கட்சித் தலைவர் குற்றச்சாட்டு முன்வைத்தார் ஆனால் அமைச்சர்கள் சார்ந்த விடயத்தை முதலமைச்சரிடம் விடுவோம் என அவைத்தலைவர் உறுதியாக இருந்தார்

சபையை தவறாக வழிநடத்தி விடாதீர்கள் என எதிர்கட்சித் தலைவரைப் பார்த்து உறுப்பினர் அஸ்மின் தெரிவிக்க முதலமைச்சர் மௌனம் சாதிப்பதுதான் இந்தப் பிரச்சினைக்கு காரணம் என எதிர்கட்சி உறுப்பினர் ஜவாகிர் தெரிவித்தார்

இந்த விடயத்துக்காக இதுவரை 20 லட்சம் ரூபா வரையில் செலவு என அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். அதன்போது குறுக்கிட்ட எதிர்கட்சித் தலைவர் சி.தவராசா. இதற்கு ஒருவிசாரணைக் குழு அமைக்க வேண்டும் என்றார்

முதலமைச்சர் பேசஅழைக்கப்பட முதலமைச்சரை பேச விடாமல் எதிர்கட்சித் தலைவர் குறுக்கீடு செய்தார்.

நாங்கள் விவாதம் செய்ய வேண்டிய அவசியமில்லை எதிர்கட்சித் தலைவரை பேச அனுமதிக்கலாம்.என முதலமைச்சர் தெரிவித்தார். சபை நடவடிக்கையை அவைத் தலைவரை தவிர வேறு எவரும் தீர்மானிக்க முடியாது. என உறுப்பினர் சயந்தன் குறுக்கிட்டார்.இந்த அறிக்கை விடயம், சபைக் வந்ததே தவறு என . உறுப்பினர் அஸ்மின் குறிப்பிட்டார். அதன்போது சபை நடவடிக்கை குழுவில் எடுத்த முடிவை நடைமுறைப்படுத்துங்கள் என உறுப்பினர் தியாகராசா கேட்டுக்கொண்டார்

அமைச்சர்கள் சார்ந்து இன்றோடு விடயம் முடிவுக் கொண்டு வரப்பட வேண்டும் என  அவைத் தலைவர் குறிப்பிட்டார்  முதலமைச்சரின் உரை தொடர்ந்தார்.

விவசாய அமைச்சரையும் கல்வியமைச்சரையும் பதவிவிலகுமாறு கோரிய முதலமைச்சர் மற்ற இரு அமைச்சர்களையும் விடுமுறையில் நிற்குமாறும் அவர்களது அமைச்சு  பொறுப்புகளயும் தான் எடுத்துக்கொள்வதாகவும் அவர்கள் மீதான விசாரணைக்காக இன்னும் ஒரு விசாரணைக்குழுவை நியமிக்க உள்ளதாகவும் அதில் குற்றமுள்ளவர்களாக அவர்கள் அடையாளம் காணப்பட்டால் தொடர்ந்து நீடிக்கப்படுவர் இல்லை எனில் அவர்களையும் பதவி விலக்க கோருவேன் என தெரிவித்தார். முதலமைச்சரின் முடிவை ஏற்றுக்கொண்ட சபைத்தலைவர் அதை தான் பாராட்டுவதாகவும் தெரிவித்தார்  அத்துடன் சபை ஒத்திவைக்கப்பட்டது

???????? ???????????? ?????????????

Posted by Thangarajah Thavaruban on Wednesday, June 14, 2017

 

Related Posts