பொதுப் போக்குவரத்து சேவைகள், இன்று (08) முதல் வழமைக்குத் திரும்புமென போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
பொதுப் போக்குவரத்து சேவைகளை முன்னெடுக்கின்ற போது, விசேடமாக மாகாணங்களுக்கிடையில் போக்குவரத்து சேவைகளை நடத்தும் போது, ஜனாதிபதி ஊடகப் பிரிவால் ஜூன் 5ஆம் திகதியன்று வெளியிடப்பட்ட அறிக்கையின் பிரகாரம் நடந்து கொள்ளவேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
சுகாதார அமைச்சின் ஆலோசனைகளின் பிரகாரம் இருக்கைகளுக்கு மட்டுமே பயணிகளை ஏற்றிச்சென்றால், இலங்கை போக்குவரத்து சபையிடமிருக்கும் பஸ்களும் தனியார் துறையினரிடமிருக்கும் பஸ்களும் போதாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதுத் தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், எனவே அந்தக் குறைப்பாட்டை நிவர்த்தி செய்வதற்காக சுற்றுலாத்துறையில் பதியப்பட்டிருக்கும் பஸ்களும், பதிவுப்பட்டியலில் காத்திருக்கும் பஸ்களுக்கும் தற்காலிகமாக அனுமதியளிப்பதற்கு கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது என்றார்.