இன்று முதல் மின்சார சபை ஊழியர்கள் இரண்டு நாள் வேலைநிறுத்தம்

பிர­தான மூன்று கோரிக்­கை­களை முன்­வைத்து இலங்கை மின்­சா­ர­சபை ஊழி­யர்கள் இன்று நண்­பகல் 12மணி முதல் 48 மணித்­தி­யால பணிப் பகிஷ்­க­ரிப்பு போராட்­டத்தில் ஈடு­ப­ட­வுள்­ள­தாக இலங்கை மின்­சார சேவை சங்­கத்தின் செய­லாளர் ரஞ்சன் ஜயலால் தெரி­வித்தார்.

கொழும்பில் நேற்று இடம்­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்­கை­யிலேயே இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறு­கையில்,

நுகர்­வோரின் மின் கட்­டண பட்­டி­யலை சரிப்­ப­டுத்­த ­வேண்டும், கொடுப்­ப­ன­வுகள் செலுத்­தப்­ப­டாமல் இருக்கும் ஊழியர் சேம­லாப நிதி­யத்தில் 2ஆயிரம் மில்­லியன் ரூபா வைப்­பி­லி­ட­வேண்டும் மற்றும் சம்­பள முரண்­பா­டு­களை தீர்க்­க­வேண்டும் என்ற மூன்று கோரிக்­கை­களை முன்­வைத்து இலங்கை மின்­சா­ர­சபை ஊழி­யர்கள் இன்று நண்­பகல் 12மணி முதல் நாட­ளா­விய ரீதியில் 48 மணித்­தி­யாலம் பணிப் பகிஷ்­க­ரிப்பு போராட்­டத்தில் ஈடு­பட தீர்­மா­னித்­துள்­ளனர்.

2014ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக் ஷ அர­சாங்­கத்தில் சட்­ட­வி­ரோதமான முறையில் மின்­சா­ர­சபை ஊழி­யர்­க­ளுக்கு 70வீதம் முதல் 120வீதம் வரை சம்­பள அதி­க­ரிப்பு மேற்­கொள்­ளப்­பட்­டது. இந்த சம்­பள அதி­க­ரிப்­புக்கு எந்­த­வித சட்ட அனு­ம­தியோ அல்­லது திறை­சே­ரியின் அனு­ம­தியோ பெறப்­ப­ட­வில்லை. இதனால் ஊழி­யர்­களின் சம்­ப­ளத்தில் பாரிய முரண்­பாடு ஏற்­பட்­டுள்­ளது. இதனை நிவர்த்­தி­செய்­யு­மாறு அர­சாங்­கத்­திடம் பல­த­டவை தெரி­வித்­துள்ளோம்.

அத்­துடன் சட்­ட­வி­ரோ­த­மான முறையில் அனு­ம­திக்­கப்­பட்ட இந்த சம்­பள அதி­க­ரிப்பு கார­ண­மாக மாதாந்தம் 600கோடி ரூபா செல­வி­டப்­ப­டு­கின்­றது. இதனால் மின்­சா­ர­ச­பைக்கு ஏற்­ப­டக்­கூ­டிய நஷ்­டத்தை நுகர்­வோ­ரி­ட­மி­ருந்து பெற்­றுக்­கொள்­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்டு வரு­கின்­றது.

அதற்­காக மின்­சார கட்­ட­ணத்தை அதி­க­ரிக்­க­வேண்டும் என மின்­சா­ர­ச­பையின் நிர்­வாக அதி­கா­ரிகள் அர­சாங்­கத்­திடம் தெரி­வித்து வரு­கின்­றனர்.

மின்­சா­ர­ச­பையில் மேற்­கொள்­ளப்­பட்ட சட்­ட­வி­ரோத சம்­பள அதி­க­ரிப்பு கார­ண­மாக தற்­போது ஏற்­பட்­டு­வரும் நிதி நெருக்­க­டியை போக்­கு­வ­தற்­காக நுகர்­வோரின் மின்­சார கட்­ட­ணத்தை அதி­க­ரிப்­ப­தற்கு அனு­ம­திக்க முடி­யாது.

அத்­துடன் அதி­கா­ரி­களின் ஊழல் மற்றும் வீண்­வி­ர­யங்கள் கார­ண­மாக மின்­சா­ர­ச­பைக்கு ஏற்­பட்­டி­ருக்கும் நஷ்­டத்தை போக்­கும்­வ­கையில் தற்­போது ஒவ்­வொரு மின் கட்­டண பட்­டி­ய­லுக்கும் உண்­மை­யான மின் கட்­ட­ணத்­துக்கு 50வீத கட்­டண அதி­க­ரிப்பு சேர்க்­கப்­பட்டு மின் கட்­டண பட்­­டியல் தயா­ரிக்­கப்­ப­டு­கின்­றது. இவை சரிசெய்யப்படவேண்டும்.

எனவே பணிப்­ப­கிஷ்­க­ரிப்பு மேற்­கொள்­ளப்­படும் 48 மணி நேரத்­துக்குள் எமது கோரிக்­கை­க­ளுக்கு அர­சாங்கம் முறை­யான தீர்­வொன்றை பெற்­றுத்­த­ரா­விட்டால் எதிர்­வரும் 15ஆம் திகதி நண்­பகல் 12மணி முதல் தொடர் பணிப்பகிஷ்­க­ரிப்பு போராட்­டத்­துக்கு செல்வோம் என்றார்.

Related Posts