நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் மின் உற்பத்தி நடவடிக்கைகள் தற்போது செயற்படுத்தப்படுவதாக, இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, இன்று மாலையளவில் 600 மெகாவோட் மின்சாரத்தை தேசிய மின் கட்டமைப்பில் இணைத்துக் கொள்ள வாய்ப்புள்ளதாக, இலங்கை மின்சாரசபைத் தலைவர் அனுர விஜயபால தெரிவித்துள்ளார்.
அவ்வாறு செய்யின், இன்று மாலை மின் வெட்டு இன்றி, முழுமையான மின்சாரத்தை வழங்க முடியும் எனவும் அவர் நம்பிக்கை வௌியிட்டுள்ளார்.