இன்று மாவீரர் நாள்! – உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்க உலகெங்கும் பெரும் ஏற்பாடு!

தமிழ் மக்களின் உரிமைக்காகப் போராடி உயிர்நீத்தவர்களை நினைவுகூரும் மாவீரர் நாள் இன்றாகும். தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கு உட்பட உலகெங்கும் தமிழர் வாழும் இடங்களில் இன்று மாவீரர் நாள் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்படவுள்ளது.

இதற்கான ஏற்பாடுகள் பெருமெடுப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தமிழர் உரிமைக்காகக் களமாடி மடிந்தவர்களை நினைவுகூருவதற்காக, மாவீரர் நாள் ஒவ்வொரு வருடமும் நவம்பர் 27 ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

2009 ஆம் ஆண்டு போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னர், தமிழர் தாயகப் பிரதேசத்தில் மாவீரர் நாள் பகிரங்கமாக அனுஷ்டிக்கப்படவில்லை.

தமிழர்கள் புலம்பெயர்ந்து பரவி வாழும் தேசங்கள் எங்கிலும் அது அனுஷ்டிக்கப்பட்டு வந்தது. எனினும், இந்த வருடம் தமிழர் தாயகம் உட்பட உலகெங்கும் தமிழர் வாழும் இடங்களில் மாவீரர் நாளை சிறப்பாக அனுஷ்டிப்பதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Related Posts