இன்று பெரிய வௌ்ளி!

புனித வெள்ளி அல்லது பெரிய வெள்ளி அல்லது ஆண்டவருடைய திருப்பாடுகளின் வெள்ளி (Good Friday) என்பது கிறிஸ்தவர்கள் இயேசு கிறித்து அனுபவித்த துன்பங்களையும் சிலுவைச் சாவையும் நினைவுகூர்ந்து ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடுகின்ற ஒரு விழா ஆகும். அவ்வகையில் இன்று (25) உலகளாவிய ரீதியில் அனைத்து கிறிஸ்தவர்களாலும் பெரிய வௌ்ளி தினம் அல்லது புனித வௌ்ளி தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

கிறித்தவ வழிபாட்டு ஆண்டில் முக்கியமான இந்த நாள் இயேசு உயிர்பெற்றெழுந்த ஞாயிறு கொண்டாட்டத்திற்கு முந்திய வெள்ளிக்கிழமை நிகழும். இயேசு கல்வாரி மலையில் சிலுவையில் அறையப்பட்டதை நினைவுகூர்கின்ற இவ்விழாவின் போது கிறித்தவக் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

பெரிய வௌ்ளி அல்லது புனித வௌ்ளி என்று சொல்லும் போதே இயேசுவின் மரணம் தான் சர்வ உலக ஜனனத்தின் நினைவிலும் வரும். அந்த நாளுக்கு முன்னோர்கள் நல்ல வௌ்ளி, புனித வௌ்ளி, எல்லா வௌ்ளிகளிலும் பெரிய வௌ்ளி, என்று மிகவும் பொருத்தமாகவே பெயரிட்டுள்ளனர்.

மரண பயத்தினால் பீடித்திருப்பவர்களுக்கு இயேசு பிரான் இத்தினத்தினூடாக நல்ல செய்தியினை வழங்கியுள்ளார். அதாவது மரண பயத்தினால் பிசாசானவன் யாவரையும் அடிமைப்படுத்தியிருந்தான். நம் இயேசு சிலுவை மரணத்தை ஏற்றுக் கொண்டு உலகிலுள்ள எல்லா மனிதர்களுக்கும் இவ்வுலகில் மரணம் என்பது வெறும் சரீரத்திற்கே சொந்தமானது என்ற உண்மையை தெளிவுபடுத்தினார். எனவே உலகிலுள்ள எந்த மனிதனும் இயேசுவின் மரணத்தினை ஏற்றுக்கொள்ளும் போது மரண பயத்திற்கு நீங்கலாகி பிசாசின் அடிமைத்தனத்திற்கு நீக்கலாக்கப்படுகிறார்கள். ஆகவேதான் இந்நாளினை நல்ல வௌ்ளி என்று உலகம் அழைக்கின்றது.

எனவே இந்தப் புனித வெள்ளியின் சிறப்பு மகிமை உலகிலுள்ள மக்கள் அனைவர் மீதும் தெய்வீக சமாதானத்தை தந்தருளி அனைவரையும் ஆசிர்வதிக்கட்டும்.

Related Posts