இன்று பெரிய வியாழன்

யாழ்.புனித மரியன்னை பேராலயத்தில் கல்வாரித் திருவிழா புனித வார நிகழ்வுகளாகப் பெரிய வியாழன்,பெரிய வெள்ளி, பெரிய சனி,உயிர்ப்பு ஞாயிறு,தியான திருச்சிலுவை வழிபாடுகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.

இன்று பெரிய வியாழக்கிழமை மாலை 5மணிக்கு திருப்பலி, பாதம் கழுவுதல்,தேவ நற்கருணைப் பவனி, எழுந்தேற்றம் என்பன நிகழவுள்ளன.

நாளை பெரிய வெள்ளிக்கிழமை மாலை 5மணிக்கு வார்த்தை வழிபாடு,திருச்சிலுவைஆராதனை என்பன நடைபெறும்.

நாளை மறுதினம் பெரிய சனிக்கிழமை இரவு 11மணிக்கு பாஸ்கா திருவிழா பெருவிழாத் திருப்பலி
பக்திவூர்வமாக இடம்பெறும்.

ஏப்ரல் 5ஆம் திகதி உயிர்த்த ஞாயிற்றுக்கிழமை காலை 6.30 மணிக்கு உயிர்ப்பு பெருவிழா திருப்பலி ஒப்புக் கொடுத்தல் நடைபெறவுள்ளது.

Related Posts