அரசியலமைப்பு சபையாக மாற்றப்பட்ட பாராளுமன்றில் இன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் புதிய அரசியலமைப்பு தொடர்பிலான சிறப்பு நிபுணர் குழு அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளது. அதன் மீதான விவாதங்கள் தொடர்கின்றன.
இடைக்கால அறிக்கை, ஆறு உபகுழு அறிக்கைகள், பாராளுமன்றம் மற்றும் மாகாண சபைகளுக்கிடையிலான தொடர்பை ஆராய்வதற்காக வழிப்படுத்தும் குழுவினால் உருவாக்கப்பட்ட நிமித்த உபகுழு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட வழிப்படுத்தும் குழுவிற்காக நிபுணர்கள் குழாமினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை இதுவாகும்.
அறிக்கையில் உள்ளடங்கியுள்ள அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரம், மொழி உரிமைகள் மற்றும் அரச கொள்கையின் வழிகாட்டிக் கோட்பாடுகள் பற்றிய அத்தியாயங்கள் அடிப்படை உரிமைகள் பற்றிய உபகுழுவினால் முன்மொழியப்பட்டவையாகும். பிரசாவுரிமை பற்றிய அத்தியாயம் தற்போதைய அரசியலமைப்பில் இருந்து மீண்டும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. [அறிக்கை காண்க]
வழிப்படுத்தும் குழுவின் இடைக்கால அறிக்கை மீதான அரசியலமைப்புச் சபையில் நடைபெற்ற விவாதத்தில் ஆற்றப்பட்ட உரைகளின் விடய ரீதியான தொகுப்பு. [அறிக்கை காண்க]
மாகாண சபைகளின் முதலமைச்சர்களால் சமர்ப்பிக்கப்பட்ட விதப்புரைகள். [அறிக்கை காண்க]