இன்று நள்ளிரவு முதல் கிராம உத்தியோகத்தர்கள் பணிபகிஷ்கரிப்பு!!

பெண் கிராம உத்தியோகத்தர்களின் பாதுகாப்பு தொடர்பான சிக்கல்களுக்கு தீர்வினை வழங்குமாறு கோரி வெள்ளிக்கிழமை (14) நள்ளிரவு 12 மணி முதல் நாடளாவிய ரீதியில் கிராம உத்தியோகத்தர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக இலங்கை கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதற்கமை இரவு நேரங்களில் ஏற்படும் பேரிடர்கள் மற்றும் உயிரிழப்பு தொடர்பான அனைத்து பணியிலிருந்தும் விலகுவதாகத் தெரிவித்துள்ளதுடன், அரச பொது நிர்வாக அமைச்சின் செயலாளருக்கும் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பில் கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் வியாழக்கிழமை (13) கடிதம் ஒன்றை வழங்கியுள்ளது.

பாதுகாப்பற்ற மற்றும் மக்கள் வசிக்காத பகுதிகளில் உள்ள அலுவலகங்களை மூடுதல், ஒருவரின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட இடத்திலிருந்து அலுவலகப் பணிகளை மேற்கொள்வது மற்றும் மதியம் 1 மணி வரை மாத்திரம் கிராம உத்தியோகத்தர்களுக்கான அலுவலகத்தில் தங்குவது உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்னிறுத்தி, கிராம உத்தியோகத்தர் சங்கம் மேற்படி பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுக்க தீர்மானித்துள்ளது.

பெண் கிராம உத்தியோகத்தர்களின் பாதுகாப்புக்கான உடனடி தீர்வுகளைப் பெறும் நோக்குடன் இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட உள்ளமையால், எமக்கான தீர்வு கிடைக்கும் வரை நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து கிராம உத்தியோகத்தர்களும் தொழிற்சங்க நடவடிக்கையில் இணைந்துக் கொள்ள தயாராக உள்ளனர் என இலங்கை கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

Related Posts