2017ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளை இன்று வௌியிடுவதாக பரீட்சைகள் திணைக்களம் கூறியுள்ளது.
இன்று நள்ளிரவுக்குள் பரீட்சை பெறுபேறுகளை இணையத்தில் வௌியிடுவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித கூறினார்.
இம்முறை கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்காக 06 இலட்சத்து 88,573 மாணவர்கள் தோற்றியிருந்தனர்.
இதேவேளை இந்தப் பரீட்சைக்கு தோற்றிய 969 மாணவர்களின் பரீட்சை பெறுபேறுகளை இடைநிறுத்த தீர்மானித்துள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் கூறியுள்ளது.