இன்று (16) இரவு 10.24 முதல் நாளை அதிகாலை 2.23 மணி வரையில் சந்திரகிரகணம் தென்படும் என இலங்கை கோள்கள் மண்டலம் தெரிவித்துள்ளது.
முழு சந்திர கிரகண நிகழ்வு நள்ளிரவு 12.24 மணிக்கு தென்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று இடம்பெறவுள்ள சந்திர கிரகணத்தை வெற்றுக் கண்களால் பார்வையிட முடியும் எனவும், கண்களுக்கு பாதிப்பு ஏற்படாது எனவும் இலங்கை கோள்கள் மண்டலம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக கிரகணத்தின் போது சந்திரனில் ஏற்படும் வர்ண மாற்றங்களை அவதானிக்கும் சந்தர்ப்பம் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.