இன்று (20) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பிறந்ததினத்தை முன்னிட்டு கோட்டா கோ கமவில் ஆர்ப்பாட்டம் தீவிரமடைந்துள்ளது.
இந்நிலையில், ஜனாதிபதி செயலகத்தின் மற்றைய நுழைவாயிலையும் நிதி அமைச்சின் நுழைவாயிலையும் இடைமறித்து கோட்டா கோ கம ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இதையடுத்து குறித்த ஆர்ப்பாட்ட்தில் ஈடுபட்ட பலரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். சுமார் இதுவரை 19 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.