இலங்கைக்கு தற்போது எந்தவொரு எதிரி நாடுகளும் இல்லை என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
உலகிலுள்ள அனைத்து நாடுகளிடமும் இலங்கை தற்போது நட்புக் கரம் நீட்டியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்று காலை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே, ஜனாதிபதி இவ்வாறு கருத்து வௌியிட்டுள்ளார்.