இன்று (06) உலக குடியிருப்புத் தினமாகும்.’நகரங்களிலுள்ள சேரிப்புறங்களிருந்து குரல்கள்’ ( Voices from slums) என்ற தொனிப்பொருளில் இவ்வாண்டு குடியிருப்புத் தினம் கொண்டாடப்படுகிறது.
இதற்கமைய இலங்கையில் கொண்டாடப்படும் உலக குடியிருப்புத் தினம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று (06) சுகதாச உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.
மேலும் நிர்மாணத்துறை- பொறியியல் சேவைகள்- வீடமைப்பு மற்றும் பொதுவசதிகள் அமைச்சர் விமல் வீரவங்சவின் ஆலோசனையின் பேரில் தேசிய வீடமைப்பு மற்றும் குடியிருப்புத் திட்டத்திற்கு பொருத்தமானதாக ‘குடியிருப்புக் குரல்- ஜனசெவனவுடன் நாளை என்ற தொனிப்பொருளில் என்ற நிகழ்வு கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.