இன்று இரவு முதல் ரயில் சேவை

யாழ்ப்பாணம் – கொழும்பு புகையிரத பயணம் இன்று செவ்வாய்க்கிழமை (14) இரவு தபால் புகையிரதமாக ஆரம்பிக்கப்படும் என யாழ். புகையிரத நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

yarldevi

அத்துடன், புகையிரத பயணத்துக்கான முற்பதிவுகளை இன்று செவ்வாய்க்கிழமை (14) காலை முதல் மேற்கொள்ள முடியும் எனவும் புகையிரத நிலைய தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

இன்ரசிற்றி (கடுகதி), குளிரூட்டப்பட்ட புகையிரதம் மற்றும் யாழ்தேவி புகையிரதம் என்பன தமது சேவைகளை நாளை புதன்கிழமை (15) முதல் ஆரம்பிக்கின்றது.

அதுவரையில் பளையிலிருந்து பொதுமக்கள் பயணங்களை மேற்கொள்ள முடியும் என புகையிரத நிலையத்தினர் மேலும் தெரிவித்தனர்.

யாழ்தேவி புகையிரத சேவையை உத்தியோகபூர்வமாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று திங்கட்கிழமை (13) ஆரம்பித்து வைத்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts