இன்றும் சில பகுதிகளில் மழை

மேல், வட மேல், தெற்கு, மத்திய மற்றும் சப்ரகமுவ ஆகிய மாகாணங்களில் இன்று (22) மழை பெய்யக் கூடும் என வளி மண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று பிற்பகல் 02.00 மணிக்குப் பின்னர் கிழக்கு மாகாணத்தில் மழை பெய்யலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

புத்தளம், கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பகுதியில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என, வளி மண்டளவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் புத்தளம், மன்னார், காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான கடற்பகுதி, மட்டக்களப்பு முதல் பொத்துவில் ஊடான ஹம்பாந்தோட்டை வரையான கடற் பகுதியில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 70 தொடக்கம் 80 வீதம் வரை அதிகரிக்கலாம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஏனைய பகுதிகளில் 50 – 60 வீதம் வரை காற்றின் அளவு காணப்படும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

Related Posts