போக்குவரத்து ஆணைக்குழுவின் பரிந்துரையின்படி இன்றுமுதல் பேருந்துக்கட்டணம் அதிகரிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் வரி அதிகரிப்புக்களுக்கமைய பேருந்துக் கட்டணத்தை உயர்த்துமாறு தனியார் போக்குவரத்துக் கழகம், போக்குவரத்து ஆணைக்குழுவிடம் முறையிட்டிருந்தது.
இதற்கமைய, இன்றுமுதல் ஆரம்பக் கட்டணமாக 9.00 ரூபா அறவிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 ரூபா கட்டணத்தில் எந்தவித மாற்றமும் இல்லை என்பதுடன் ஏனைய கட்டணங்கள் ஆறு வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளன.
அத்துடன், மிகுதிப் பணம் வழங்காத பேருந்து நடத்துநருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.