இன்றுமுதல் பஸ்களில் ஆசன முன்பதிவு செய்ய முடியாது

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு இன்று (08) முதல் விஷேட பஸ் சேவைகள் இடம்பெறவுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபை கூறியுள்ளது.

பயணிகள் தமது சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு வசதியாக இந்த சேவை இடம்பெறவுள்ளதாக அந்த சபையின் பிரதி பொது முகாமையாளர் ராஜா குணதிலக கூறினார்.

அத்துடன், புத்தாண்டின் பின்னர் வெளிப்பிரதேசங்களிலிருந்து விஷேட பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

அதேவேளை இன்றுமுதல் புத்தாண்டு காலம் நிறைவடையும் வரையில் பஸ்களில் ஆசன முன்பதிவுகளை மேற்கொள்ள முடியாது என்று ராஜா குணதிலக கூறினார்.

இதுதவிர புத்தாண்டை முன்னிட்டு இன்றுமுதல் விஷேட ரயில் சேவைகள் இடம்பெறவுள்ளதாக ரயில்வே போக்குவரத்து அதிகாரி விஜய சமரசிங்க கூறினார்.

Related Posts