இன்றுடன் கட்டுப்பணம் செலுத்தல் நிறைவு: நாளை வேட்பு மனு தாக்கல் நிறைவு!

mahinda-deshpriyaமத்திய, வடக்கு மற்றும் வடமேல் மாகாண சபைத் தேர்தல்களுக்கான வேட்புமனுக்கள் ஏற்கும் பணிகள் நாளை நண்பகல் 12 மணியுடன் முடிவடைகிறது.

சுயேச்சைக் குழுக்களுக்கு கட்டுப்பணம் செலுத்துவதற்கு வழங்கப்பட்ட கால எல்லை இன்று நண்பகல் 12 மணியுடன் முடிவடைவதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

மூன்று மாகாண சபைத் தேர்தல்களுக்கான வேட்புமனுக்கள் ஏற்கும் பணி கடந்த 25ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

10 மாவட்ட செயலகங்களில் வேட்புமனுக்களை ஏற்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதனையொட்டி விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.

நேற்று நண்பகல்வரை அரசியல் கட்சிகள் சார்பில் 17 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருப்பதுடன், 49 சுயேச்சைக்குழுக்கள் சார்பில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

முஸ்லிம் காங்கிரஸ், ஜனசெத பெரமுன, ஐக்கிய இலங்கை மகாசபை, ஸ்ரீலங்கா தொழிலாளர் கட்சி என்பன சார்பாக 9 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இலங்கைத் தமிழரசுக் கட்சி வடக்கிலுள்ள ஐந்து மாவட்டங்களில் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளதோடு, ஐ.ம.சு.மு, ஐ.தே.க போன்ற கட்சிகள் இறுதி நேரத்தில் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தல் நடைபெறும் திகதி நாளை நண்பகல் தேர்தல் ஆணையாளரால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது.

Related Posts