இன்றிரவு த.தே.கூ இந்தியா செல்கிறது

TNAஇந்திய அரசாங்கத்தின் விசேட அழைப்பின் பேரில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற குழு ஒன்று இன்று இரவு இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளது.

இரா.சம்பந்தன் தலைமையில் இக்குழு பயணத்தை மேற்கொள்ளவுள்ளது. 13ம் திருத்தச்சட்டம் தொடர்பாக கலந்துரையாடுவதற்கு வருமாறு கடந்தவாரம் இக்குழுவுக்கு இந்தியா அழைப்பு விடுத்திருந்தது.

இவ்ழைப்பையேற்றே இக்குழு இன்று இந்தியா செல்லவுள்ளது. இக்குழு இந்திய பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஆகியோருடனான சந்திப்புக்களை மேற்கொள்ளும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts