இன்னொரு ஆயுத போராட்டத்தை கூட்டமைப்பு விரும்பாது: சுரேஷ்

suresh-peramachchantheranதமிழ்த் தேசிய கூட்டமைப்பு இன்னுமொரு ஆயத போராட்டம் இடம்பெறுவதற்கு காரணமாக செயற்பாடாது என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்தார்.

யாழ். ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

‘கடந்த 27ஆம் திகதி மன்னாரில் இடம்பெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் இடம்பெற்ற எனது உரையினை அரசாங்க ஆங்கில பத்திரிகையானது திரிபுபடுத்தி எழுதியிருந்தது. இதனை கருத்தில் கொண்டு விமல் வீரவன்ஸ எனமீது சட்ட ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்துள்ளார்.

நான் மீண்டும் ஒரு ஆயுத போராட்டத்திற்கு தூண்டுதலாக உரை நிகழ்த்தியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ்த் தேசிய கூட்டமைப்பானது எந்தவொரு கால கட்டத்திலும் இன்னுமொரு ஆயுத போராட்டத்திற்கு காரணமாக இருக்காது.

அவ்வாறு ஆயுத போராட்டம் ஏற்படுமிடத்து அதற்கு காரணமாக அரசாங்கமே இருக்க முடியும். அரசின் அடக்கு முறைகளை தகர்த்து, தமிழ் தேசிய கூட்டமைப்பு வட மாகாண சபை தேர்தலில் பாரிய வெற்றியை அடையும்

அவ்வாறு அடைவதன் ஊடாகவே தமிழ் மக்களுக்கான ஒரு தீர்வினை நோக்கி முன்னேற முடியும். தேர்தலை குழப்புவதன் ஊடாக வாக்கு வீதத்தினை குறைப்பதற்கான திட்டத்தினை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.

வாக்கு வீதத்தினை அதிகரித்தால் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கூடுதலான வாக்குகள் பெற்று தேர்தலில் வெற்றி பெற்று விடும் என்ற அச்சத்தில் மக்களை அச்சமடைய செய்யும் சூழலை உருவாக்குகின்றது.

நடைபெறவுள்ள வடமாகாண சபை தேர்தலில் மக்களை வாக்களிக்க முடியாத வகையில் அரசாங்கம் தொடர்ச்சியாக அச்சுறுத்தல் விடுத்து இவ்வாறான விடயங்களை செய்து வருகின்றது’ என்று மேலும் அவர் தெரிவித்தார்.

Related Posts