இன்னைக்காவது முடி வெட்டியிருக்கலாமே… இஷாந்த் ஷர்மாவை கலாய்த்த ரோஹித் சர்மா

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மாவுக்கு நேற்று நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதற்கு வாழ்த்து தெரிவித்துள்ள ரோஹித் ஷர்மா, இன்னைக்காவது முடிவெட்டியிருக்கலாமே என இஷாந்த் சர்மாவை கலாய்த்துள்ளார்.

ishanth-1

இந்திய அணியில் உள்ள வீரர்கள் சமீப காலமாக அடுத்தடுத்து திருமணம் செய்து வருகின்றனர். யுவராஜ், ரோஹித் சர்மா, ரெய்னா, ஜடேஜா, உமேஷ் யாதவ், வருண் ஆரோன் அடுத்தடுத்து திருமண வாழ்க்கையை தொடங்கியுள்ளனர்.

இந்த பட்டியலில் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான இஷாந்த் சர்மாவும் இணைகிறார். டெல்லி கூடைப்பந்து வீராங்கனையான பிரதிமா சிங் என்பவரை இஷாந் சர்மா காதலித்து வந்தார். இந்நிலையில், நேற்று இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

27 வயதாகும் இஷாத் சர்மா இதுவரை 68 டெஸ்ட் , 80 ஒருநாள் மற்றும் 14 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். வேகப்பந்து வீச்சாளராக இருந்த போதிலும், நீண்ட முடியுடன் ஓடி வந்துதான் இஷாந்த் ஷர்மா பந்து வீசுவார்.

ishanth-2

இதனிடையே இஷாந்த் ஷர்மாவுக்கு, இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ரோஹித் சர்மா டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

வாழ்த்து தெரிவித்ததோடு மட்டுமல்லாமல், அவரது நீண்ட ஹேர் ஸ்டைலை கலாய்த்தும் உள்ளார். இது தொடர்பாக ரோஹித் சர்மா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, ‘‘எங்கள் கிளப் (திருமணம் முடிந்தவர்கள்) உங்கள் இருவரையும் வரவேற்கிறது. இருவருக்கும் வாழ்த்துக்கள். இன்னைக்காவது முடி வெட்டிவிட்டு வந்திருக்கலாமே” என்று டுவிட் செய்துள்ளார்.

இஷாந்த் சர்மா மற்றும் ரோஹித் சர்மா ஆகிய இருவரும் நல்ல நண்பர்களே என்பதால், இந்த கமென்ட்டை இஷாந்த சர்மா மகிழ்ச்சியுடனே ஏற்றுக் கொள்வார் என தெரிகிறது. ஒருமுறை இஷாந்த சர்மா கட்டையாக முடி வெட்டியிருந்தாராம், ஆனால் அந்த கெட்அப் யாருக்கும் பிடிக்கவில்லையாம். இதனாலேயே ரோகித் கலாய்த்துள்ளாராம்.

Related Posts