இன்னும் ஏழு நாட்களில் மிகப்பெரிய தாக்குதல் ஒன்றிற்கு ரஷ்யா தயாராவதாக உக்ரைன் உளவுத்துறைத் தலைவர்கள் எச்சரித்துள்ளார்கள்.
உக்ரைன் தாக்குதலின் முதலாம் ஆண்டு நினைவுநாளையொட்டி இந்த தாக்குதலை புடின் நிகழ்த்தலாம் என்ற அச்சம் உருவாகியுள்ளது.
உக்ரைன் தேசிய பாதுகாப்புக் கவுன்சிலின் செயலரான Oleksiy Danilov, இம்மாதம், அதாவது 23 அல்லது 24ஆம் திகதி இந்தத் தாக்குதலை ரஷ்யா நிகழ்த்தலாம் என்று கூறியுள்ளார்.
ரஷ்யா, 500,000 போர்வீரர்கள், 1,800 போர் வாகனங்கள், 3,950 கவச வாகனங்கள், 400 போர் விமானங்கள் மற்றும் 300 ஹெலிகொப்டர்களை உக்ரைன் போரில் களமிறக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனாலும், உக்ரைன் தயாராக உள்ளது என்றும், தாக்குதலை எதிர்கொள்ள உக்ரைனால் முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையில், களத்தில் பெரும் இழப்பைச் சந்தித்துள்ள ரஷ்யா, இம்முறை வான்வழித்தாக்குதலை நிகழ்த்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.