இன்னும் முடிவெடுக்கவில்லை, மாவை சேனாதிராசா தெரிவிப்பு

ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்று இந்த மாத இறுதியில் தீர்மானிக்கப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

தேர்தலில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் வெளிவந்த பின்னர் அது குறித்து தீர்மானிக்கப்படும்.தேர்தல் தொடர்பாக கிராமம் கிராமமாக சென்று மக்களின் கருத்துக்களை நாம் அறிந்து வருகின்றோம்.

எவ்வாறெனினும், இன்று வரை யாருக்கு ஆதரவளிப்பது என்பது குறித்து எந்தவித தீர்மானமும் எடுக்கவில்லை. இம்மாத இறுதியில் நாம் எமது முடிவை அறிவிப்போம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts