வளி மண்டலத்தில் ஏற்பட்டுள்ள குழப்பநிலை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் இன்னும் இரு வாரங்களுக்கு மழை பெய்யும் அறிகுறி உள்ளதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் வானிலை அவதான நிலையத்தின் அதிகாரி சன்ன ரொட்ரிகோ தெரிவித்த விவரங்கள் வருமாறு:-
“சில பிரதேசங்களில் நூறு மில்லி மீற்றருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடிய சாத்தியங்கள் உள்ளன. மேல், தென், வடமேல் மாகாணங்களில் காலைவேளைகளில் மழை பெய்யலாம். இடியுடன் கூடிய மழை பெய்யும் பிரதேசங்களில் காற்றின் வேகம் தற்காலிகமாக அதிகரிப்பதுடன், மின்னலும் தோன்றும். மின்னல் தாக்கத்திலிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ள மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டியது அவசியம்.
கடற்பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் உள்ளது. அச்சமயத்தில் கடல் ஓரளவு கொந்தளிப்புடன் காணப்படும்” – என்று அவர் விளக்கமளித்தார்.