இன்னும் இரண்டு மாதகாலத்தில் படிப்படியாக மீள்குடியேற்றம்! மாவிட்டபுரத்தில் அமைச்சர் சுவாமிநாதன்

இன்னும் இரண்டு மாத காலத்தில் அவகாசத்தில் படிப்படியாக மீள்குடியேற்ற விடயத்தை முன்னெடுத்துச் செல்வதுடன் மக்களை குடியேற்றுவதற்கான நடவடிக்கைளை மேற்கொள்வதாகவும் புனர்வாழ்வு மீள்குடியேற்ற இந்து மத அலுவல்கள் அமைச்சர் .எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

புதிய அரசின் அமைச்சரவையில் அமைச்சராகப் பதவி ஏற்ற பின்னர் முதல் தடைவையாக நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் வருகை தந்த அமைச்சர் மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொண்டார்.

அதன் பின்னர் இடம்பெயர்ந்தோர் நலன்புரி சங்கத்தின் தலைவர் எஸ்.குணபாலசிங்கம் மற்றும் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடியபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முன்னதாக மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயதில் அமைச்சர் வழிபாடுகளை மேற்கொண்டார். காலையில் இடம்பெற்ற விசேட பூசை வழிபாடுகளில் கலந்துகொண்டதுடன் அவரை சந்திக்க வந்தபொது மக்களுடனும் கலந்துரையாடினார்.

ஆலயத்துக்கு வருதைக தந்தை அமைச்சரை ஆலய பிரதம குரு சிவஸ்ரீ இரத்தினசபாபதிக்குருக்கள், ஆலய புனரமைப்புச் சபையின் தலைவர் எஸ். பேரின்பநாதன், வலி.வடக்கு பிரதேச செயலாளர் எஸ்.ஸ்ரீமோகனன், வலி வடக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எஸ்.சுகிர்தன் ஆகியோர் வரவேற்றார்கள்.

Related Posts