இன்னுமொரு கொலை செய்வதற்காகவா இவ்வாறு அடிபடுகின்றீர்கள்?

fight-warயாழ்.மனோகராச் சந்திக்கருகிலுள்ள தனியார் வகுப்பு நிலையத்திற்கு முன்னால் பாடசாலை மாணவர்களின் குழுக்களுக்கிடையில் கைகலப்பு ஏற்பட்டதுடன், அப்பகுதி மக்களினால் அந்த கைகலப்பு முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்துக்களின் போர் துடுப்பாட்டப் போட்டி ஆரம்பமாகவுள்ள நிலையில், யாழ். இந்து கல்லூரி பாடசாலை மாணவர்கள் பாண்ட் வாத்தியத்துடன் வீதியில் சென்றபோதே இக்கைலப்பு ஏற்பட்டுள்ளது.

மூர்க்கத்தனமாக அடிப்பட்ட மேற்படி மாணவர்களை அங்கு கூடிய பொதுமக்கள் ‘இன்னுமொரு கொலை செய்வதற்காகவா இவ்வாறு அடிபடுகின்றீர்கள்’ எனக் கேட்டு கலைத்துவிட்டனர்.

இது தொடர்பாக குறித்த பாடசாலையின் நிர்வாகத்தினர்களுக்கும் பொதுமக்களால் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts