இன்டர்நெட்டில் மகனின் இறுதி சடங்கு! பெற்றோர் கதறல்

இலலங்கை மன்னார் மாவட்டத்தை சேர்ந்தவர் சீமோன்பிள்ளை. இவரது மனைவி எலிசபெத். கடந்த 1990ம் ஆண்டு இவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் வேலூர் மேல்மொணவூர் அகதிகள் முகாமுக்கு சென்றனர்.

fire

இவர்களுக்கு 4 மகன்கள் உள்ளனர். 2வது மகன் லியோசின்(30). கடந்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வந்து இங்கிருந்து ஆஸ்திரேலியாவுக்கு கடல்மார்க்கமாக சென்றார்.

அங்குள்ள மெல்போர்ன் நகரில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில், கடந்த 1ம் தேதி காலையில் லியோசின் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாக சீமோன்பிள்ளைக்கு ஆஸ்திரேலியாவில் இருந்து போன் வந்தது. இதைக்கேட்டதும் அதிர்ச்சி அடைந்த சீமோன்பிள்ளை கதறி அழுதார்.

வழக்கு குறித்து விசாரணை முடிந்து லியோசினின் உடல் அங்குள்ள அவரது நண்பர்கள் மற்றும் மெல்போர்ன் நகரில் உள்ள சர்ச் பாதிரியார்களிடம் நேற்று முன்தினம் இரவு ஒப்படைக் கப்பட்டது.

அவரது உடலுக்கு நேற்று இறுதி சடங்கு நடந்தது. மகனின் இறுதி சடங்கை அகதிகள் முகாமில் இருந்தபடியே அவரது பெற்றோர் சீமோன்பிள்ளை, எலிசபெத், சகோதரர்கள் மற்றும் உறவினர்கள் கம்ப்யூட்டரில் உள்ள ஸ்கைப் வசதி மூலம் பார்த்தனர். சுமார் ஒன்றரை மணி நேரம் லியோசினின் இறுதி சடங்கு கிறிஸ்தவ முறைப் படி நடந்தது.

வெளிநாட்டில் நடந்த மகனின் இறுதி சடங்கு நிகழ்ச்சியை வீடியோ மூலம் வீட்டில் இருந்தபடி பார்த்துக் கொண்டிருந்த பெற்றோர்கள், உறவினர்கள் கதறி அழுதனர்.

Related Posts