இனி வேட்டிய கட்ட வேண்டாம், ஒட்டினால் போதும்!!

விழுப்புரத்தில் உள்ள பிரபல ஜவுளிக்கடை ஒன்று மாடர்ன் மாப்பிள்ளைகளுக்காக புதிய ரக வேட்டி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

veshti-modern

விழுப்புரத்தில் உள்ள பிரபல துணிக்கடை ஒன்று நவீன கால மாப்பிள்ளைகளுக்காக புதிய ரக வேட்டியை அறிமுகப்படுத்தியுள்ளது. திருமணம் என்றால் மாப்பிள்ளைகள் நிச்சயம் வேட்டி கட்ட வேண்டும். தற்போது ஜீன்ஸ் பேண்ட் போட்டு பழகியவர்களுக்கு இடுப்பில் வேட்டி நிற்க மறுக்கிறது. இதனால் பெல்ட் போட்டு வேட்டி கட்டுகிறார்கள்.

இந்த பிரச்சனை தீர்க்க மாடர்ன் மாப்பிள்ளைகளுக்கான வேட்டியை அந்த கடை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய வேட்டியில் செல்போனை வைக்க பாக்கெட், வேட்டி இடுப்பில் நிற்க வெல்க்ரோ பெல்ட், பெல்ட் கட்ட லூப் ஆகியவை உள்ளன. இந்த புதிய வேட்டியை கட்ட வேண்டாம் ஒட்டினால் போதும்.

பெண்கள் சேலை கட்டும் நேரத்தை குறைக்க ரெடிமேட் சேலை வந்தது. அதை சேலையே கட்டத் தெரியாதவர்கள் கூட எளிதில் கட்டலாம்.

இந்த வேட்டி மேட்டர் ட்விட்டரில் பிரபலமாகி வருகிறது.

Related Posts