இனி ரொக்கட்டுக்களும் பூமிக்கு திரும்பும்! சோதனை முயற்சி வெற்றி!

இவ்வளவு காலமும் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துவதற்கு பயன்படும் ரொக்கட்டுக்கள் மீள பூமிக்கு திரும்புவதில்லை விண்வெளியிலேயே எரிந்து விடும் ஆனால் இனி அவை பூமிக்கு திருப்பப்பட்டு மீள் சுழற்சிப்பாவனைக்கு பயன்படுத்தப்படும். அதற்கான சோதனை ‪#‎SpaceX‬  தனியார் விண்வெளிக்கலங்கள் உற்பத்தி நிறுவனத்தால் நேற்று (21) வெற்றி கொள்ளப்பட்டுள்ளது.  இதன் மூலம் விண்வெளிப்பயணத்துக்கான செலவு குறைக்கப்படுகின்றது.

ரொக்கட்டுக்கள் புவியீர்ப்பு விசைகெதிராக விண்வெளிக்கலங்ளை விண்வெளிக்குள் செலுத்துவதற்கான பயன்படுத்தப்படுகின்றன. அவற்றின் எரிபொருள் தகனத்தின் காரணமாக பெறப்படும் உந்துசக்தி அதற்குபயன்படுகின்றது.

விண்வெளிக்கலங்களையும் செயற்கைக்கோள்களையும் விண்ணில் செலுத்தியதும் ரொக்கட்டுக்கள் விண்வெளியில் அழிக்கப்படுவது வழமை. இதுவே மிகப்பெரிய செலவு இனி அனுப்பிய இடத்திற்கே மீள அந்த ரொக்கட்டுக்களை மீளப்பெறுவதன் மூலம் அவற்றின் பாகங்களை மீளப்பயன்படுத்த முடியும். இது விண்வெளி பயண யுகத்தில் ஒரு மைற்கல்லாக பார்க்கப்படுகின்றது

Space X நிறுவனம் 2002 இல் கலிபோர்னியாவில் தொடங்கப்பட்ட நிறுவனமாகும்

மீளத்திரும்பும்காட்சி

High resolution video of landing from the helo

Posted by SpaceX on Monday, 21 December 2015

Related Posts