இனி பாடசாலை மாணவர்கள் தமது பாடசாலைகளில் இருந்தபடியே ஆளுநர், கல்வி அமைச்சின் செயலாளர், கல்வி பணிபாளருடன் பேசலாம்!

வடமாகாண பாடசாலைகளில் க.பொ.த சாதாரண மற்றும் உயர்தரம் கற்கும் மாணவர்கள் ஒவ்வொரு மாதமும் தமது பாடசாலைகளில் இருந்தவாறே வடமாகாண ஆளுநர், மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், மாகாண கல்வி பணிப்பாளருடன் தமது பிரச்சினைகள் மற்றும் தேவைகள் தொடர்பாக பேசுவதற்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாதமும் முன்கூட்டியே அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்ட பாடசாலைகளில் இருந்து மாணவர்கள் ஆளுநருடன் பேச முடியும். இந்த கலந்துரையாடல் ஒரு வலையமைப்பில் இணைக்கப்பட்டிருப்பதுடன், நேரடியாக ஆளுநருடன் மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், மாகாண கல்வி பணிப்பாளர் இணைந்திருப்பர்.

இந்த திட்டம் தொடர்பில் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் உமா மகேஸ்வரனை தொடர்பு கொண்டு கேட்டபோது ஆளுநரின் வழிகாட்டலில் பாடசாலை மாணவர்களின் கருத்துக்களை ஆளுநர் கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் மாகாண கல்விப் பணிப்பாளருடன் பகிர்ந்து கொள்ளும் செயற்பாடு இடம் பெற உள்ளது.

அதற்கான சகல நடவடிக்கைகளும் வடமாகாண கல்வி அமைச்சின் ஊடாக முன் எடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் எதிர்வரும் வாரத்தில் குறித்த செயற்பாட்டை ஆரம்பிக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts