இனி நாணய சுழற்சி தேவையில்லை!

138 வருட டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கை தற்போது பகல்-இரவு ஆட்டமாக புது பரிமாணம் பெற்றுள்ளது. தற்போது மீண்டும் ஒரு பரிணாமமாக நாணயம் (டாஸ்) சுண்ட தேவையில்லை என்ற முடிவை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் எடுத்துள்ளது.

இங்கிலாந்தில் கவுன்டி போட்டிகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த போட்டிகளை காண ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வருவார்கள்.

இதில் கவுன்டி சாம்பியன்ஷிப் தொடர் முக்கியமானது. இந்த தொடரில் சொந்த மைதானத்தில் விளையாடும் அணி தங்களுக்கு சாதகமான வகையில் வேகப்பந்து வீச்சுக்கு ஆதரவான ஆடுகளத்தை தயார் செய்து எதிர் அணி துடுப்பாட்ட வீரர்களை நிலைகுலையச் செய்து விடுகின்றனர். மேலும், இந்த ஆடுகளத்தில் சுழற்பந்து வீச்சுக்கு வேலையில்லாமல் போய் விடுகிறது.

இங்கிருந்து சர்வதேச அணிக்கு தேர்வாகும் வீரர்கள் எதிர் அணியின் சுழற்பந்தை எதிர்கொள்ள முடியாமல் தவிக்கிறது. இதனால் ஒரு இடத்திற்கு விளையாடச் செல்லும் அணி களத்தடுப்பை தேர்வு செய்ய விரும்பினால் அந்த போட்டியில் நாணயம் சுண்டப்பட மாட்டாது. மாறாக அந்த அணி களத்தடுப்பில் ஈடுபட மறுத்தால் நாணயம் சுண்டப்படும்.

ஆகவே பகல்-இரவு ஆட்டம், இளஞ்சிகப்பு என்று மாறிய டெஸ்ட் போட்டியில் நாணயம் போடப்பட மாட்டாது என்ற முறை விரைவில் வந்தால் ஆச்சரியப்படுவதற்கொன்றுமில்லை.

Related Posts