தேனீர் வழங்கும் போது,தேநீருக்குள் சீனியை கலக்காது,பிறிதொரு பாத்திரத்தில் சீனியை வைத்து தேவையான அளவு கலந்து கொள்ளும் விதத்தில்,ஹோட்டல்கள்,தேநீர்ச்சாலைகள்,சிற்றுண்டிண்டிச்சாலைகளில் வழங்குவது அவசியம், என சுகாதார அமைச்சின் விசேட சுற்று நிருபம் அறிவித்துள்ளது.
நாளை(14) உலக சிறுநீரக நோயாளர் தினத்தை முன்னிட்டு ,இவ்விசேட விதிகள் நடைமுறைப்படுத்த உள்ளதாக ,சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் பாலித மகிபால அவர்கள் தெரிவித்துள்ளார்.சுகாதார சேவை,மாவட்ட சுகாதார அத்தியட்சகர்கள்,சுகாதார நிறுவன முக்கியஸ்தர்கள் ,சுகாதார வைத்திய அதிகாரிகள்,மாநகர சபை சுகாதார வைத்திய அதிகாரிகள் போன்றோருக்கு குறைந்த சீனிபாவனையால் நோயற்ற நாட்டை உருவாக்கும் திட்டமாக, இச்சு ற்று நிருபத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன்படி நாளை முதல் ,சகல அரச நிறுவனங்களிலும் கூட்டங்கள்,வைபவங்கள்,பயிற்சிப்பட்டறைகள் .நிகழ்வுகள் நடாத்தப்படும்போது, இடம் பெறும் உபசரிப்புகளில் ,சீனி கலக்காத தேனீர்,கோப்பி,பால் கலந்த தேநீர் போன்றன வழங்கப்படல் வேண்டும். அத்துடன் பாடசாலைகள்,சிற்றுண்டிச்சாலைகளில் அதிக உப்பற்ற ,அதிக எண்ணெய் கலக்காத ,அதிக சீனி அற்ற உணவு,பானங்கள் வழங்கப்டல் வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.