இனிமேல் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைதுகள் கிடையாது- அமைச்சர் மனோ!

manoபயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ஆவா குழு சந்தேக நபர்களான இளைஞர்கள், பயங்கரவாத தடை சட்டத்தின் கீழிருந்து அகற்றப்பட்டு சாதாரண சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுவார்கள் என மொழிகள் மற்றும்  சகவாழ்வு நல்லிணைக்க  அமைச்சர் மனோகணேசன் தெரிவித்தார்.

இம்முடிவு சற்று முன்னர் கூடிய ஐதேமுன்னணி கட்சி தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்டது என்றும் இன்று காலை, யாழ்ப்பாணத்தில் இருந்து தனது அமைச்சுக்கு வந்து, தன்னை சந்தித்த, கைது செய்யப்பட்ட இளைஞர்களின் குடும்ப உறுப்பினர்கள் இது தொடர்பான கோரிக்கையை தன்னிடம் முன்வைத்திருந்தனர் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

பயங்கரவாதத்தடைச்சட்டம் பயன்படுத்தப்படாவிடில் அந்த சட்டம் நீக்கப்படுமா என்பது தொடர்பில் அவர் கருத்து எதனையும் தெரிவிக்கவில்லை.

Related Posts