இனிமேல் எனது அரசியல் தலைவர் ரணில் விக்ரமசிங்கவே

இனிமேல் எனது அரசியல் தலைவர் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவே என்று அமைச்சர் பீல்ட் மாஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

sarath-ranil

பிரதேச அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மாஷல் சரத் பொன்சேகா ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்ளும் நிகழ்வு நேற்று காலை இடம்பெற்றது.

இந்த நிகழ்விலேயே அமைச்சர் சரத் பொன்சேகா இவ்வாறு கூறினார்.

தான் இனிமேல் ஜனநாயக கட்சியின் தலைவர் அல்ல என்றும், எனினும் அந்தக் கட்சி கலைக்கப்பட மாட்டாது என்றும் அவர் கூறினார்.

2020ம் ஆண்டில் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் ஒன்றை அமைக்கும் நோக்கில் தான் ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து கொண்டதாகவும், மேலும் ஜனநாயக கட்சியின் உறுப்பினர்களும் இணைந்து கொள்வார்கள் என்றும் அவர் கூறினார்.

தனது அழைப்பை ஏற்று பீல்ட் மாஷல் சரத் பொன்சேகா ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து கொண்டதாக அந்தக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க கூறினார்.

ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து கொண்ட ஜனநாயக கட்சியின் உறுப்பினர்களுக்கு மாவட்ட மற்றும் பிரதேச மட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் பொறுப்புக்கள் வழங்கப்படும் என்றும் ரணில் விக்ரமசிங்க கூறினார்.

Related Posts