இனவாதம் இல்லாத இலங்கையினை உருவாக்குவதே எமது இலக்கு யாழில் பிரதமர்!!

இனவாதம் இல்லாத இலங்கையினை உருவாக்க வேண்டுமென்பதே எமது இலக்கு என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

யாழ்.மாவட்ட செயலகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட 3 மாடிக் கட்டிடத்தினை நேற்று (17) திறந்து வைத்த பின்னர் அங்கு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

அரசியல் ரீதியான பிரச்சினைகளை ஆராய்ந்து தீர்ப்பது அடுத்த விடயமாக இருக்கின்றது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ 13வது திருத்தத்திற்கு அப்பால் சென்று 13 பிளஸ் தருவதாக கூறினார். ஆனாவ் அவர் அதை செய்யவில்லை.

இதனால் தமிழ் மக்களின் பிரச்சினை மோசமான நிலமைக்கு மாறியது. இஸ்லாம் மக்களும் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க நேரிட்டது. சிங்கள மக்களும் முகம் கொடுக்க வேண்டி இருந்தது.

இந்தப் பிரச்சினைகளை தீர்க்க வேண்டுமென்பதற்காகவே ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவினை பொது வேட்பாளராக நியமித்து ஜனாதிபதியாக கொண்டு வந்தோம்.

புதிய அரசியல் யாப்பினை உருவாக்குவதற்கு நாடாளுமன்றத்தினை அரசியலமைப்புச் சபையாக மாற்றியுள்ளோம். அதில் முக்கியமானவர்களை கொண்டு நெறிப்படுத்தல் குழு அமைக்கப்பட்டுள்ளது.

அதிகார பகிர்வு என்பது மாகாண சபைகளுக்கு மட்டுமன்றி பிரதேச சபைகள், நகர சபைகளுக்கும் செல்ல வேண்டுமென்றும் கலந்துரையாடியுள்ளோம்.

புதிய அரசியலமைப்பு உருவாக்குவதன் மூலம் பௌத்த மதத்திற்கு பாதிப்பு என்றும், தேசிய கொடி, தேசிய கீதம் இல்லாமல் போகும் என்றும் சிலர் கூறுகின்றனர்.

தேசிய கொடி, தேசிய கீதம், பௌத்த மதம் என்பன ஏற்கனவே ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயங்கள் அவை பற்றி கலந்துரையாடுவதற்கு ஒன்றும் இல்லை. பௌத்த மதம் அரசாங்கத்தினால் பாதுகாக்கப்படும்.

இனவாதம் இல்லாத இலங்கையினை உருவாக்க வேண்டும். அதுவே எமது இலக்கு என்றார்.

Related Posts