வடக்கு மாகாணசபையில் நிறைவேற்றப்பட்ட இனப்படுகொலை தொடர்பிலான பிரேரணையின் தீர்மானத்தை மீளப்பெற வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
அத்துடன், இவ்வாறான பிரேரணைகளைக் கொண்டு வருவதற்கான அதிகாரங்கள் மாகாணசபைக்கு இல்லையென்பதால் இவ்வாறான விதிமுறைகளுக்குப் புறம்பான செயற்பாட்டினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கட்டியெழுப்பப்படவுள்ள தேசிய அரசின் நல்லிணக்கத்தை நீர்த்துப் போகச் செய்யும் நடவடிக்கையாகவே தாம் கருதுவதாக அவர் மேலும் கூறியுள்ளார்.
இதேவேளை இலங்கையில் போர் காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் தமிழ் இனப் படுகொலை குறித்து வடமாகாணசபை ஆளும்கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் சிவாஜிலிங்கத்தால் கொண்டுவரப்பட்ட தீர்மானம் பெரும் ஆதரவுடன் அண்மையில் நிறைவேற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.