இனந்தெரியாத நபர்களின் கத்திக்குத்தில் வயோதிபர் காயம்

யாழ்., புத்தூர் பகுதியில் இனந்தெரியாத நபர்களின் கத்திக் குத்துக்கு இலக்காகிய நிலையில் வயோதிபர் ஒருவர் அச்சுவேலி வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் வெள்ளிக்கிழமை அதிகாலை ஒரு மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில், கலைமதி வீதி புத்தூரைச் சேர்ந்த தியாகராசா (வயது 54) என்பவரே தலையில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தனது வீட்டு வந்த நான்கு பேர் தன்னை கத்தியால் குத்தியதாகவும் உடனே தான் மயக்கமுற்றதால் அங்கு வந்தவர்களை அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை என்றும் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts