இந்த வருட இறுதிக்குள் மாகாணசபை தேர்தல்!!

சட்டதிருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு இந்த வருட இறுதிக்குள் மாகாணசபை தேர்தலை
நடாத்துவதற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்படுமென அமைச்சர் ரமேஸ் பத்திரன குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளுராட்சி மன்ற தேர்தல் ஒரு வருடத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சுகாதார நிலைமையை கருத்தில் கொண்டு இந்த நிலைமை எடுக்கப்பட்டுள்ளது.

உள்ளுராட்சி மன்றங்களின் இரண்டு வருடங்கள் கடந்த அரசாங்க காலத்திலேயே முடிந்தது.

அடுத்து கொரோனா தொற்று காரணமாக சில காலம் விணானது. இதனால் ஆகவே அவர்களுக்கு சேவைகளை முன்னெடுக்க கூடிய கால எல்லையை வழங்கவேண்டும் என்பதற்காக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

மாகாணசபை தேர்தல் விடயம் கடந்த அரசாங்க காலத்தில் ஆரம்பித்த பிரச்சினையாகும். சட்ட திருத்தங்களை ஏற்படுத்தாது தேர்தலை முன்னெடுக்க முடியாத நிலையே காணப்படுகின்றது. இந்த நிலையில், திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு இந்த வருட இறுதிக்குள் தேர்தல் நடாத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

Related Posts