இந்த மாதத்துடன் வெளியேறுகிறது டனிஷ் கண்ணிவெடி அகற்றும் பிரிவு

யாழ்.மாவட்டத்தில் மிதிவெடி அகற்றும் செயற்பாடுகளில் டனிஷ் கண்ணிவெடி அகற்றும் நிறுவனம், ஹலோட் ரஸ்ற் மற்றும் இராணுவத்தினரின் மனிதநேயக் கண்ணிவெடி அகற்றும் பிரிவு ஆகியன ஈடுபட்டு வந்தன. தொடர்ச்சியாக நிதிப் பற்றாக்குறைகள் இருப்பதன் காரணமாக டனிஷ் கண்ணி வெடி அகற்றும் நிறுவனம் தனது பணியாளர்களைக் குறைத்துக் கொண்டு வந்தது. இந்த நிலையில் தொடர்ந்தும் இயங்க முடியாத இக்கட்டான நிலைமைக்கு இந்த நிறுவனம் தள்ளப்பட்டதால் இந்த மாத இறுதியுடன் பணிகளை நிறுத்தி அதனை மூடிவிட அவர்கள் தீர்மானித்துள்ளனர்.

இதன் காரணமாக கண்ணிவெடி அகற்றும் பணிகள் தாமதமடையவுள்ளன. முகமாலை முன்னரங்க நிலைகள் தவிர்த்து ஏனைய இடங்களில் அடுத்த ஆண்டு இறுதியில் பூரணமாகக் கண்ணி வெடி அகற்றி முடிக்கப்படும் என்று எதிர்பார்த்தோம் இருப்பினும் டனிஷ் நிறுவனம் வெளியேறுவதால் 2014 ஆம் ஆண்டளவிலேயே அவற்றை அகற்றி முடிக்கக் கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது.

இதனைவிடத் தற்போது இராணுவத்தின் மனிதநேயக் கண்ணிவெடி அகற்றும் பிரிவினரும் முல்லைத்தீவுக்கு இடமாற்றம் பெற்றுச் சென்றிருப்பதால் கண்ணிவெடி அகற் றும் பணிகளில் மேலும் தாம தம் ஏற்படும் என்றார்.

Related Posts