இந்த நூற்றாண்டின் மிக முக்கிய கண்டுபிடிப்பு!! : புவி ஈர்ப்பு அலைகள்

புகழ்பெற்ற நோபல் பரிசு விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டின் 100 ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடித்து சொன்ன புவி ஈர்ப்பு அலைகளை தற்கால விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர். கடந்த 1915ஆம் ஆண்டு விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டின் தனது கோட்பாடு ஒன்றில் இது குறித்த கணிப்பை முன்வைத்தார். அதைத்தான் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். வான்வெளியில் ‘கருந்துளை’ என்ற மர்மத்தை ஏற்கெனவே விஞ்ஞானிகள் கண்டுபிடித்து இருந்தனர்.

விண்வெளியில் கருந்துளைகள் எனப்படும் நியூட்ரான் நட்சத்திரங்கள் ஒன்றோடு ஒன்று மோதும்போது (பெருவெடிப்பு) அவை இணைந்து ஈர்ப்பாற்றல் அலைகள் உருவாக்குகின்றன. இவை சுருங்கி விரிவடைவதன் மூலம் ஆற்றல் உந்தப்பட்டு உலகம் உருவானதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.ஓசைமயமான இந்தப் ஈர்ப்பாற்றல் அலைகள் பிரபஞ்சத்தின் ஒலிவழித்தடங்கள் என்று அழைக்கப்படுகின்றன. “இந்த ஈர்பாற்றல் அலைகளின் விரிவாக்கம்தான் வெளியையும் காலத்தையும் உருவாக்குகின்றன, உண்மையில் வெளியும் காலமும் ஒன்றுதான்’ என்ற சார்புநிலைக் கோட்பாட்டை (ரிலேட்டிவிட்டி தியரி) பிரபல விஞ்ஞானி ஐன்ஸ்டீன் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு கூறினார்

தற்போது, அதன் மூலம் புவி ஈர்ப்பு அலைகள் இருக்கிறதா? இல்லையா? என்பதை அறிய சர்வதேச விஞ்ஞானிகளுடன் இந்திய விஞ்ஞானிகளும் பணியாற்றி வந்தனர். கடந்த 2015ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி அமெரிக்காவில் லூசியானா மாகாணத்தில் உள்ள லிவிங்ஸ்டன் என்ற இடத்தில் ‘லிகோ டிடேக்டர்ஸ்’ என்ற கருவி மூலம் புவி ஈர்ப்பு அலைகள் கண்டுபிடிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. மேலும், இரு கருந்துளைகள் மோதிக்கொள்ளும் போது மாற்றங்களையும் இந்த விஞ்ஞானிகள் குழு கண்டறிந்துள்ளது. அப்போது, நிகழும் சப்தத்தை இந்த குழு பதிவு செய்துள்ளது.

இந்தக் கண்டுபிடிப்பின் மூலம் விண்வெளியைக் கண்களால் மட்டுமே ஆய்வு செய்துவந்த விஞ்ஞானிகள் இனி செவிகளாலும் அதனை மேற்கொள்வார்கள் என்று இக் குழுவைச் சேர்ந்த கொலம்பியா பல்கலைக்கழக விஞ்ஞானி ஸ்சாபோல்க்ஸ் மார்க்கா கூறினார்.

புவிஈர்ப்பு அலைகளை கண்டுபிடிப்பதில் இந்திய விஞ்ஞானிகளும் தங்கள் பங்களிப்பை வழங்கியுள்ளனர். புனேவில் உள்ள சர்வதேச வானியற்பியல் மற்றும் வானவியல் பல்கலைக்கழகத்தில் இந்திய விஞ்ஞானிகள் இது குறித்த அறிவிப்பை முறைப்படி அறிவிக்கின்றனர். இந்த விழாவில் கஸ்துரி ரங்கன் உள்ளிட்ட 12-க்கும் மேற்பட்ட மூத்த விஞ்ஞானிகள் பங்கேற்கின்றனர். இந்திய விஞ்ஞானிகள் ஆற்றிய இந்த சேவைக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

‘கருந்துளை ‘உள்ளதா? இல்லையா? பல ஆண்டுகளாக நீடித்து வந்தது. புவி ஈர்ப்பு அலைகள் இருந்தால் ‘’கருந்துளை பற்றிய மர்மமும் விலகும்.திரைப்படங்களில் வரும் ‘ டைம் மெஷின்’ போன்ற கருவிகளின் பயன்பாடு பற்றியதன் விளக்கமும் ஏற்படும். மேலும் அகிலத்தின் அடுத்த பக்கத்தையும் அறிந்து கொள்ள முடியும்.

ஈர்ப்பாற்றல் அலைகளைக் கண்டறிந்துள்ள சர்வதேச விஞ்ஞானிகள் குழுவில் இடம்பெற்றுள்ள இந்திய விஞ்ஞானிகளுக்கு இந்தியப் பிரதமர் மோடி பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள தகவலில்

“சவால்மிக்க இந்தச் சாதனையில் இந்திய விஞ்ஞானிகளின் பங்கு குறித்து மிகவும் பெருமிதம் அடைகிறேன். இந்த வரலாற்றுக் கண்டுபிடிப்பு மூலம் பிரபஞ்சத்தை நன்கு அறிந்துகொள்ள புதிய வாய்ப்பு உருவாகியுள்ளது. ஈர்ப்பாற்றல் அலைகள் தொடர்பான மேலும் முன்னேற்றகரமான ஆய்வுகள் இந்தியாவில் இனி நடைபெறும் என உறுதியுடன் நம்புகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

Related Posts