இந்த ஆண்டு தேர்தல் வருடமாகும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று(புதன்கிழமை) கதிர்காம புனிதத் தலம் உள்ளிட்ட பல இடங்களுக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார்.
பிரதமர் முதலில் கதிர்காம புனிதத் தலத்தில் வழிபாடுகளில் ஈடுபட்டார். இதன்போது புனிதத் தலத்தின் அபிவிருத்திக்கான சகல பணிகளையும் அரசாங்கம் மேற்கொள்ளும் என பிரதமர் கூறியுள்ளார்.
நாளாந்தம் ஏற்பட்டுவரும் பௌத்த எழுச்சியினால், சமூகத்திற்கு சிறந்த நன்மைகள் கிடைத்திருக்கின்றன.
மஹா சங்கத்தினரை இழிவுபடுத்திய காலம் முடிவிற்கு வந்திருப்பதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து, தங்காளை பிரதேசத்தில் அமைந்துள்ள வழிபாட்டுத் தலங்களுக்கும் பிரதமர் விஜயம் செய்தார். இங்கு கருத்து தெரிவிக்கையிலேயே தேர்தல் தொடர்பாக குறிப்பிட்டுள்ளார்.
ஒரு லட்சம் பேருக்கு தொழில்வாய்ப்புக்களை வழங்கும் நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்ட பிரதமர், பொதுத் தேர்தலின் பின்னரே முழுமையான அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்த முடியும் எனவும் கூறியுள்ளார்.