இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு

இந்தோனேஷியாவின் ஜாவா தீவில் இன்று அதிகாலை (உள்நாட்டு நேரம்) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இது ரிக்டர் அளவில் 6.5ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

ஜாவா சுமத்ரா தீவுக்கு மேற்கே கடலுக்கு அடியில் 91 கிலோ மீற்றர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாகவும், சுமார் 20 வினாடிகள் வரை நிலநடுக்கம் நீடித்திருந்ததாகவும் கூறப்படுகின்றது.

எவ்வாறாயினும், சேத விபரங்கள் எவையும் வெளியாகவில்லை. இதனிடையே 2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட நிலநடுக்கத்தை அடுத்து சுனாமி ஏற்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related Posts