இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில், பயங்கர நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில், 6 ஆக பதிவாகி இருந்ததாக அமெரிக்க நிலவியல் ஆய்வுத்துறை கூறியுள்ளது.
அந்நாட்டில் சிபோல்கா நகரின் தென்மேற்கில் 125 மைல்களுக்கு அப்பால் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கடலுக்கடியில் 18.6 மைல்களுக்கு கீழே இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது. எனினும் இப்பூகம்பத்தால் சுனாமி ஏற்பட வாய்ப்பில்லை என வானிலை மையம் கூறியுள்ளது.
நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத நிலவரம் பற்றிய தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுக்கு மேற்கில் 30 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. தொடர்ந்து சுனாமியும் ஏற்பட்டது. இந்தோனேசியாவில் அதிகபட்சமாக 1.60 லட்சம் பேர் பலியாயினர். இலங்கையில் 35 ஆயிரம் பேரும் இந்தியாவில் 18 ஆயிரத்துக்கு அதிகமானோரும் ஆழிப்பேரலையில் இழுத்து செல்லப்பட்டு பலியானார்கள்.
அதே சுமத்ரா தீவு பகுதியில் தற்போது பூகம்பம் ஏற்பட்டதால் இலங்கையை மீண்டும் சுனாமி தாக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டது.